தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

by Editor / 31-07-2019 09:32:34pm
 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை:

     இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகளையும் அதில் இருந்த ஏழு மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணையில் ஒரு விசைபடகு பழுது காரணமாக இலங்கை கடல் பரப்பிற்க்குள் சென்றதாகவும் அதனை மீட்பதற்க்காக மற்றொரு படகு சென்ற போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படை கைது செய்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 INDTN08MM 147
 என்ற பதிவு எண் கொண்ட 
அந்தோணிராஜ்39 கோட்டைப்பட்டிணம், என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் படகின் உரிமையாளர் 1.அந்தோணி ராஜ்  மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 2.கோவிந்தன் வயது 60, 3 செல்வம் வயது 45, 4. நவாஸ் வயது 25 ஆகிய நான்குபேரும் கோட்டைப்
பட்டணத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Share via