சிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை

by Admin / 13-11-2018
சிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை

சிகாகோ: அமெரிக்கா நாட்டின் சிகாகோ மாநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் போலீசாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

சிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிகாகோவில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் ஜெமல் ராபர்சன் என்பவர் பாதுகாப்பு பணியாளாராக பணிபுரிந்துவந்தார். கடந்த ஞாயிறுக்கிழமை மாதுபானக் கடையில் ஒரு சண்டை ஏற்பட்டது. இதில் மர்ம நபர் சிலர் நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச்செல்ல முயன்றனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு காவலராக பணியாற்றும் ராபர்சன் மதுபானக்கடையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவரை துரத்திப் பிடித்து, துப்பாக்கி முனையில் அவரை முட்டிப்போட வைத்துள்ளார். அதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அங்கு நடந்த எதையும் விசாரிக்காமல் கறுப்பினத்தவரான ராபர்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அங்கு இருந்த மக்கள் உயிரை ராபர்சன் பாதுகாத்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ராபர்சன் பல தேவாலயங்களில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார். இசைக் கலைஞரான ராபர்சனுக்கு காவல்துறையில் சேர வேண்டுமென்ற கனவு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மதுபான கடையின் உள்ளே பொதுமக்கள் பலரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்று தகவல் வந்தது. இதனால் துப்பாக்கி முனையில் மர்மநபரை பிடித்து வைத்திருந்த ராபர்சனை குற்றவாளி என நினைத்து தவறுதலாக சுட்டுவிட்டதாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.