குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒரு உடல் மிதந்தது .

by Editor / 13-08-2019 03:14:06pm
குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒரு உடல் மிதந்தது .

   துரை ஆரப் பாளையம் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் சூரிய நாராயணன் என்பவர் கடந்த 10 ஆம் தேதி குற்றாலம் வந்த நபர் அருவியில் குளித்து கொண்டிருந்தவர் காணாமல் போனார்.இவர் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் உறவினர்கள் நேற்று 12ஆம் தேதி குற்றாலம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்குக் கொண்ட நிலையில் இன்று அதிகாலை குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒரு உடல் மிதந்து உள்ளது. இது குறித்து காவல்துறை க்கு அந்த பகுதியினர் தகவல் சொல்லவே விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனை க்கு தென்காசி மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காணாமல் போன சூரிய நாராயணன் உடல் தான் என்பது அது உறுதி செய்யப் பட்டு உள்ளது.

Share via