அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை

by Editor / 13-11-2018
அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை

ப்யூனோஸ் எயர்ஸ்: அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை

ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் திரண்ட சமையல் கலைஞர்கள் 3,000 கிலோ மாவு மற்றும் 3,100 லிட்டர் தக்காளி சாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பீட்சாகளை தயாரித்தனர். இத்தாலியில் 12 மணிநேரத்தில் 10,065 பீட்சாகளை தயாரித்ததே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அர்ஜென்டினாவில் உள்ள சமையல் கலைஞர்கள் 11,000 பீட்சாகளை வெறும் 12 மணி நேரத்தில் தயாரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி விதிகளின் படி ஒவ்வொரு பீட்சாகளும் குறைந்தது 11.8 அங்குல விட்டம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படியே அர்ஜென்டினா சமையல் கலைஞர்கள் பீட்சாகளை தயாரித்து அசத்தினர். போட்டி முடிந்த பிறகு பீட்சாகளை விற்று வரும் வருமானத்தை உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.