அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது

by Editor / 16-08-2019 10:50:56am
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது

   காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும் அத்திவரதர்

கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்பு பக்தர்களுக்கு அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது .  இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது, பொது தரிசனத்திற்கு மட்டுமே இன்று அனுமதி.

மஞ்சள் - ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்.

காலை 5.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

அத்திவரதரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளனர்.

நாளை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர், 2059-ல் மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Share via