திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடா மூன்று  நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

by Editor / 22-08-2019 01:03:31pm
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடா மூன்று  நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் 

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என  சென்னை  வானிலை மையம் எச்சரிக்கையின்  படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடா மூன்று  நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  இரண்டாவது நாளாக கடற்கரை பக்தர்கள் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது.

     தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மி வேகத்தில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் வீசக்கூடும்   21 ஆம் தேதி காலை 5.30 முதல் 23 ஆம் தேதி நள்ளிரவு 11.30  குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 2.8 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை உயரம் எழும். மேலும்  கடற்பரப்பின் நீரோட்டம் ஒரு நிமிடத்திற்கு 51-72 ௭ழக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது எனவும் மீன்பிடி படகுகள் உபகரணங்கள் பாதுகாப்பு இடங்களில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு இரண்டாவது நாளாக தடை செய்தனர்.  மேலும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து பக்தர்கள் கடற்கரையில் இருந்து வெளியேற்றினர். இதனையடுத்து இன்று இரரூர்டாவது நாளாக  கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த  பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாததால்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share via