கரடுமுரடான பாதைகளை கடந்து நீர் நிலைகளைத்தேடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் 

by Editor / 22-08-2019 05:00:30pm
கரடுமுரடான பாதைகளை கடந்து நீர் நிலைகளைத்தேடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் 

இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான காட்டற்று அருவிகளிலும் மக்கள் குளித்து இயற்கையான சூழல் அனுபவித்து சென்ற வண்ணம் உள்ளனர்

கரடுமுரடான பாதைகளை கடந்து நீர் நிலைகளைத்தேடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் 

 

   நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக குற்றாலம்,ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வருகின்றது. இந்த அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியான செங்கோட்டை அருகில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த மலைப்பகுதியில் உள்ள நெய்யருவி என சொல்லப்படும் அருவியிலும்,வனப்பகுதியில் இருந்து பல்வேறு பாதைகளை கடந்து வரும் காட்டாற்றின் ஓடைகள் அருவியாய் பல்வேறு பகுதிகளில் கொட்டிவருவதிலும் குளிப்பதற்க்காக இந்தபகுதிக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளும் குண்டாறு நோக்கி விரும்பி படையெடுத்து இங்குள்ள வாகனங்களில் கரடுமுரடான பாதைகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு குளிக்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.நாடின்பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான காட்டற்று அருவிகளிலும் மக்கள் குளித்து இயற்கையான சூழல் அனுபவித்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்த பகுதி முழுவதிலும் குளுகுளுவென்று இருக்கின்றது.