குற்றால அருவிகளில் குளிக்க தடை நீங்கியது:-ஐந்தருவியில் அலைமோதும் கூட்டம்

by Editor / 23-08-2019 09:33:35am
குற்றால அருவிகளில் குளிக்க தடை நீங்கியது:-ஐந்தருவியில் அலைமோதும் கூட்டம்

காலை முதலே அருவிகளுக்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீங்கியது:-ஐந்தருவியில் அலைமோதும் கூட்டம்

நேற்று குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுத்த படம்

நெல்லை

   நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைவனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2மணி நேரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததின் காரணமாக ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்தது,தொடர்ந்து கலங்கலாக நீர்வரத்தைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் அப்புறப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து திடீரென அருவியில் ஆர்ப்பாரிப்போடு நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கொட்டத்தொடங்கியது.மரக்கட்டைகள் அடித்துவரப்பட்டது.தொடர்ந்து அங்கு நீர்வரத்து அதிகரித்து கொட்டிவருகின்றது.இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி,பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து அங்கும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்தனர்.நீர்வரத்து அதிகரித்து கலங்கலாக பாதுகாப்பு வளையம் தாண்டி நீர் கொட்டி வருவதால் அங்கும் காட்டாற்று வெள்ளம் உருவாகியுள்ளது.இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுப்படுத்தபட்டுள்ளனர். சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் நேற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோத தொடங்கியது.