உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து

by Editor / 26-08-2019 10:23:45am
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

 

 

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து

   ஸ்விட்சர்லாந்தின் பசெல் நகரில் கடந்த 19ம் தொடங்கி நடைபெற்று வரும் உலகக் கோப்பை பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறதுஇதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து 3வது முறையாகவும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியவீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவும் மோதினார்கள். சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 21க்கு 7 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து கைப்பற்றினார். பின்னர் ஆக்ரோசத்துடன் ஆடிய சிந்து, 2வது ஆட்டத்தில் 21க்கு 7 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்.

இதன் மூலம் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தவர் பி.வி.சிந்து .

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டும் 15 வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து 13வது இடத்தைப் பிடித்துள்ளார்....

பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் - பிரதமர் மோடி.

Share via