2 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

by Editor / 21-09-2019 04:35:59pm
 2 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

 2 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

   பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும்  பெரும் கேடு விளைவித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்,  2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில், 40 மைக்ரானுக்கு கீழ் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது இருந்தது. 

அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளில் 50 மைக்ரானுக்கு குறைவான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது இருந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5 ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

தென்காசி நகராட்சிப்பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் விற்பனை செய்ய இயலாத வீடுகள் தோறும் பிரித்து வாங்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளாக பயன்படுத்த சங்கர் சிமெண்ட் நிறுவனத்திற்கு சுமார் 2 டன் அளவில் அனுப்பட்டது.