திருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் பதிவு

by Editor / 02-10-2019 04:45:17pm
திருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் பதிவு

லலிதா ஜுவல்லரியில் 2 பேர் கொள்ளையடித்தது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் பதிவு

திருச்சி 

  திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு, பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை .

காலை 9 மணிக்கு கடை திறந்த போது, அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்தில் போலீஸ் துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை.

முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.