மேற்குத் தொடர்ச்சிமலை பாதுகாப்பு மிக முக்கியமானது

தமிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்குவது குற்றாலம். பல ஆயிரம் அபூர்வமான பல மூலிகைசெடிகளில் மழைத்துளிபட்டு குற்றால அருவிகளில் நீர் அருவியாய் விழுவதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், நன்மையும் ஏற்படுவதால் ஆண்டுக்கு சுமார் 1கோடி சுற்றுலாப் பயணிகள் இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் வந்து இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் புதியதாக ஒரு அருவி மக்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.இந்த அருவியின் பெயர் "கரடி பால்ஸ்" இந்த அருவி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அங்கு வரும் மதுபான பிரியர்கள் மற்றும் ஆயில் பாத் ஆயில் மசாஜ் செய்யக் கூடிய நபர்கள் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் அங்குள்ள தனியார் விடுதிகளின் காவலர்கள் ,மேலாளர்கள் சிலர் வனத்துறையினர் பெயரைச்சொல்லி குளிப்பதற்கு பணம் வாங்கிக் கொண்டு அருவிக்கு செல்ல வழியமைத்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாம் நடத்திய விசாரணையில் கரடி அருவிக்கு செல்ல ஐந்தருவி சாலையில் தனியார் நிலம் வழியாக கொஞ்ச
காலார நடக்கவேண்டும்.பின்னர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அருவியில் நீராடிவிடலாம்,பாதுகாப்பு என்பது துளியும் கிடையாது,பெண்கள் செல்வதற்கு ஆபத்தான இடம்.இந்த பகுதியை வனத்துறையினருக்கு தெரியாமல் சில நபர்கள் தங்களது விடுதிகளுக்கு தங்க வரும் நபர்களை அழைத்து சென்று குளிக்க வைத்து வருகின்றனர்.அதற்க்கு தனியாக கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.குற்றாலம்,மேக்கரை,குண்டாறு,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான அருவிகள் உள்ளன.இங்கும் கட்டணங்கள் வசூலித்து வருகின்றனர்.இங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குடித்து கும்மாளம் போட்டுவிட்டு போட்டு செல்லும் கழிவுகளை யாரும் அப்புறப்படுத்துவது கிடையாது ஆனால் தகவல் கிடைத்தால் வனத்துறையினர் சென்று அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர்.வருவாய்த்துறையும்,வனத்துறையும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தனியாரது நிலங்கள் வழியாக ஆக்கிரமிப்பில் இருக்கும் அருவிகளை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவசியம்.இப்போது என்னதான் வனத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும் குற்றாலம் சிற்றருவி பேரூராட்சியிடமிருந்து வனத்துறையினர் வசம் வந்தது முதல் வனத்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வாடிக்கையாகி உள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலையையம்,அதிலுள்ள வனச்செல்வங்களையும்,அரியவகை வன விலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்,