தமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்ப்பு 

by Editor / 11-10-2019 06:15:37pm
தமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்ப்பு 

சென்னை விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, மிகுந்த உற்சாகத்துடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது

தமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்ப்பு 

   தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சென்னை விமான நிலையத்தில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, இன்று காலை புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன விமானப்படை விமானம் மூலம், பகல் சென்னை வந்தடைந்தார்.

 

சென்னை விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, மிகுந்த உற்சாகத்துடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள்,உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை வந்த சீன அதிபரை, வெளியுறவுத்துறை அதிகாரிகளும் வரவேற்றனர்.

 

தமிழக பாரம்பரியத்தோடு தவில், நாதஸ்வரம் இசைத்தும், கொம்பு ஊதியும்,பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்வுகளுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங், கையை அசைத்து, கலைஞர்களை உற்சாகப்படுத்தி, கலைஞர்களின் வரவேற்பினை ஏற்றார்.

 

விமான நிலையத்திலிருந்து, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங், தாம் தங்கும், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஐந்து நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

விமான நிலையம் முதல் கிண்டி ஹோட்டல் வரை, சீன அதிபருக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பல இடங்களில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியின் முகப்பில், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களும், சீன மாணவர்களும், ஜி ஜின்பிங்கிற்கு வரவேற்பு அளித்தனர்.7அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதால் அவர் தாங்கும் பகுதி மிகவும் பரப்பரப்பாகவே இருக்கிறது.

Share via