போக்சோ குற்றவாளிகளுக்கு கருணை மனு இல்லை: -ஜனாதிபதி பேட்டி

by Editor / 06-12-2019 08:08:40pm
போக்சோ குற்றவாளிகளுக்கு கருணை மனு இல்லை: -ஜனாதிபதி பேட்டி

போக்சோ சட்டசத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றம் செய்தவர்களுக்கு கருணை மனு அளிப்பதற்கு உரிமை இல்லை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

 ஜெய்பூர் :

    னாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானின் சிரோஹி பகுதியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் பாலியல் குற்றவாளிகள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது. கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார். 

2012 ம் ஆண்டு டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து இவரின் கருணை மனுவை ஜனாதிபதியும் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

 

Share via