திருச்சியில் 30 டன் வெங்காயம் இறக்குமதி :- 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்

by Editor / 10-12-2019 02:38:49am
திருச்சியில் 30 டன்  வெங்காயம் இறக்குமதி :- 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்

திருச்சி:

  ர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற இடங்களில் தீவிர மழையின் காரணமாக, இந்த ஆண்டு, வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிப்படைகிறது இதனால், வரத்து குறைந்து, நவம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கி விட்டது தற்போது, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், கிலோ, 150 முதல், 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து, 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சியில் உள்ள வியாபாரிகள் நேரடியாகவே துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து, நேற்று விற்பனையை செய்யத் தொடங்கி விட்டனர்.

மத்திய அரசு முயற்சி செய்தால், இறக்குமதி வெங்காயத்தை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Share via