ஹெட்மையரின் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

by Editor / 16-12-2019 09:38:37am
ஹெட்மையரின் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி 

சென்னை

இந்தியாவெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்தது இந்தியா சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது.

ரிஷப் பந்த் (71)
ஷ்ரேயாஸ் அய்யர் (70)
கேதர் ஜாதவ் (40)

 

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கினர்.

ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்துவந்த ஷாய் ஹோப் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாய் ஹோப் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹெட்மையர் அதிரடியாகவும் ஆடினர்

ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். 

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய  ஹெட்மையர் 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதமாகும்.

அதிரடியாக சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷாய் ஹோப் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து 8-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Share via