காவலன் செயலி புதுப்பிப்பு,ஆபாச படம் பார்த்த 30 பேர் பட்டியல் தயாராக உள்ளது ஏடிஜிபி. ரவி

by Editor / 20-12-2019 01:42:23pm
காவலன் செயலி புதுப்பிப்பு,ஆபாச படம் பார்த்த  30 பேர் பட்டியல் தயாராக உள்ளது ஏடிஜிபி. ரவி

காவலன் செயலியை மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் விரைவில் புதிய மாற்றங்கள் செயல்பட இருப்பதாக ஏடிஜிபி ரவி தெரிவித்திருக்கிறார் 

சென்னை

கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி எம்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

உலகத்தில் பெரும்பாலான குற்றங்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடந்து வருகின்றன பிற குற்றங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன .

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளன அதுவும் இல்லாத நிலை உருவாக்கப்படும்

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்களை எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சமீபத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை கைது செய்தோம்

இப்போது கூட சென்னையை சேர்ந்த 30 பேர் பட்டியலை அனுப்பி நடவடிக்கை எடுக்க கூறிவிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

இரண்டு மாணவிகள் என்னை சந்தித்து அவர்கள் ஆபாச படம் பார்த்ததாகவும் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறினர் இனிமேல் இதுபோன்று செய்யாதீர்கள் என சொல்லி அறிவுரை கூறினேன்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்வதற்கு வசதியாக தமிழக போலீசார் சார்பில் காவலன் செயலி பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் 7.3 கோடிமக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் 10 லட்சம் பேர் தான் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் காரணங்கள் என்னவென்று கேட்டபோது” யூசர் பிரண்ட்லி” ஆக இல்லை என்றும் இந்த செயலியில் ஆதார் எண் புகைப்படம் போன்ற விபரங்கள் கேட்கப்படுகின்றன இதனால் தங்கள் தனிப்பட்ட ரகசியம் சுதந்திரம் பறி போவதாக பலர் கருத்து கூறுகின்றனர்

செல்போன் எண் மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலியை எளிமையாக உபயோகப் படுத்தும் வகையிலும் செயலியை மாற்றி வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்

இந்த செயலியை மறு வடிவமைத்து அடுத்த வாரம் முதலே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்

 

Share via