2020 ஆம் ஆண்டு சந்தோஷத்துடன் வரவேற்று கொண்டாடிய மக்கள்

by Editor / 01-01-2020 07:34:47am
2020 ஆம் ஆண்டு சந்தோஷத்துடன் வரவேற்று கொண்டாடிய மக்கள்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு சந்தோஷத்துடன் வரவேற்று கொண்டாடிய மக்கள்

    லகம் முழுவதும் மக்கள் வேற்றுமைகளைக் மறந்து அனைத்து தரப்பினரும்  இந்த 2020 ஆம் ஆண்டு சந்தோஷமாக வரவேற்றனர் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்..

புதிய வருடம் என்றாலே நாம் அனைவருமே அந்த நாளின் முதல் நாளை நாம் சந்தோஷமாக மகிழ்ச்சியுடனும் தொடங்க விரும்புகின்றோம்.

இந்த புதிய ஆண்டின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம் இந்த ஆண்டு வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை உலகம்நாடு முழுவதும் பரவி இருக்கிறது.

உலகம் முழுவதும் வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து கொண்டாட்டங்கள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வந்தனர் நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டங்கள் களைகட்டியது..

கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இந்த சிறப்பு பிரார்தனைகளில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட வானவேடிக்கைகள், வண்ணமயமான ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை மெரினாவில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி புத்தாண்டை கொண்டாடினர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது, 

மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் கடுமையான குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்..