அமெரிக்கா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு;

by Editor / 01-01-2020 09:05:30am
அமெரிக்கா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு;

கீத் தாமஸ் கின்னுனென் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

அமெரிக்கா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு;

அமெரிக்கா

   அமெரிக்காவின் டெக்சாஸ் போர்ட் வொர்த் நகரின் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். 

துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் வெளியிட்டார்.

இந்த சம்பவத்தினை கண்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளாகினர்.அதன்பிறகு தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் உடனடியாக தனது கைத்துப்பாக்கியை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றார். 

படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது.

யார் இந்த நபர் ? எதற்காக இந்த துப்பாக்கிச்சூடு?  இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via