சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

by Others / 13-11-2018
சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் வண்டி எண் 06047 டிசம்பர் 3,5,10,12,17,19,24,26,31 மற்றும் ஜனவரி 2,7,9, 14-ம் தேதிகளில் இரவு 8:40க்கு சென்னையில் இருந்து புறப்படும். என்றும் கொல்லம் சிறப்பு ரயில்கள் வண்டி எண் 06048 டிசம்பர் 4,6,11,13,18,20,27 மற்றும் ஜனவரி 3,8,10-ம் தேதிகளில் மாலை 3மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த இரு சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via