ட்ரெண்டிங் ஆகும் சூர்யாவின் "சூரரைப் போற்று" 2 ஆம் லுக் போஸ்டர்

by Editor / 02-01-2020 07:25:02pm
ட்ரெண்டிங் ஆகும் சூர்யாவின்

இந்தியாவில் முதல்பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின்  வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின்  2 ஆம் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் 'சூரரைப் போற்று’ இப்படத்தை ‛இறுதிச்சுற்று’ சுதாகொங்கரா இயக்குகிறார் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் 

சூர்யாவின் சொந்த நிறுவனமான, 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். . 

இப்படத்தில் நடிகர் சூர்யா சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியதாக கூறப்படுகிறது . இப்படத்தின் டீசர் வரும் 7ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர் 

 

Share via