தெலுங்கானாவில் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை;

by Editor / 05-01-2020 10:20:45pm
தெலுங்கானாவில் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை;

தெலுங்கானாவில் மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமியின் பெயர் சேர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தெலுங்கானாவில் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை;

ஐதராபாத்: 

       வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடப்பது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இதுநாள் வரையிலும் நடந்திராத புதுவிதமான குழப்பம் இதுவாகும். 

கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் குழந்தை நந்திதா அதாவது 3 வயது சிறுமி நந்திதாவின் பெயர் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் 35 வயது என்று குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தந்தை ரமேஷ் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொண்ட பிறகே  சிறுமியின் பெயரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

 

 

Share via