துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் பலி.

by Editor / 09-01-2020 08:15:51am
துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் பலி.

துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் பலி.

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..

சோதனை சாவடியில் பணியில் எப்போதும் இரண்டு போலீஸ்காரர்கள் இருப்பார்கள் ஆனால் தேர்தல் காரணமாக பணியில் ஒரு உதவி ஆய்வாளர் மட்டும் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

நேற்று இரவு உதவி ஆய்வாளர் வில்சன் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது  திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த மர்ம கும்பல் துப்பாக்கியை எடுத்து உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டனர்.

அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் அந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சோதனை சாவடிக்கு வந்து வில்சனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியிலேயே வில்சன் இறந்துவிட்டார்.

மர்ம நபர்கள் ஏன் வில்சனை சுட்டுக் கொன்றார்கள்?ஏதேனும் முன்விரோதமா? போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிரொலியாக மர்ம காரையும்,மர்ம நபர்களையும் தென்காசி மாவட்ட பகுதிகளிலும்,தமிழக கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் திவிரமாக கண்காணித்து வருகின்றனர்.