குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற - சோனியா காந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேறியது

by Editor / 14-01-2020 09:28:25am
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற - சோனியா காந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடிப்போம்- சோனியா காந்தி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற - சோனியா காந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேறியது

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டம் எதிராக நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

(சி.ஏ.ஏ) குடியுரிமை திருத்தச் சட்டம்,( என்.ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேடு,( என்.பி.ஆர்)., தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பிரச்சினைகளால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த தாக்குதலால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இது தொடர்பாக டெல்லியில் சோனியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்:

இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன், லோக் ஜனதாதளம் சரத் யாதவ், ராஷ்டிரீய லோக் சமதா கட்சி உபேந்திர குஷாவா, ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா, தேசிய மாநாடு கட்சி ஹஸ்னைன் மசூதி உள்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய மூன்றும் இவை ஏழை மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரானது.

ஆகையால்,( என்.பி.ஆர்)., (சி.ஏ.ஏ),( என்.ஆர்.சி), திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு கணக்கெடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கு பெறாத கட்சிகள்:

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.

சோனியா காந்தி பேசியதாவது:

சோனியா காந்தி பேசும்போது, “பிரதமரும், உள்துறை மந்திரியும் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர்" .  இந்தியாவில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை  பொருளாதார வீழ்ச்சிதான். அதனை சரிசெய்வதற்கு மோடியிடம் பதில் இல்லை. எனவே நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்த பிரிவினை பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள்” மத்திய அரசின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடிப்போம் எனக் கூறினார்

 

 

 

Share via