வேலூரில் பொங்கல் பண்டிகைக்காக 24 கைதிகளுக்கு பரோல்

by Editor / 14-01-2020 11:26:50am
வேலூரில் பொங்கல் பண்டிகைக்காக 24 கைதிகளுக்கு பரோல்

வேலூர்:

வேலூர் மத்திய ஆண்கள் சிறைச்சாலையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை, விசேஷ நாட்கள் என்றாலே கைதிகளின் நன்னடத்தை பார்த்து அவர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 47 கைதிகள் பரோல் கேட்டு ஜெயில் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர் அதில் 24 பேருக்கு பரவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பரோலில் சென்று தப்பித்து தலைமறைவாக இருந்தவர்களின் பரோல் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பரோலில் செல்லும் கைதிகள் தங்கள் பரோல் காலம் முடிந்து மீண்டும் 20ஆம் தேதி ஜெயிலுக்கு வர வேண்டும் என உத்தரவு.

 

 

Share via