ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்ய 14ம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்..

by Editor / 14-03-2020 08:09:13am
ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்ய 14ம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்..

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது..

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மார்ச் 2020 மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.03.2020 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது..*

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது..

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்..

மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் தங்கள் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்..

Share via