இந்தியாவில் கொரோனா பாதிப்பு  492 ஆக உயர்ந்துள்ளது.

by Editor / 24-03-2020 11:04:47am
இந்தியாவில் கொரோனா பாதிப்பு  492 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,500-ஐ தாண்டிய நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது அதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471-ல் இருந்து 492 ஆக இன்று உயர்ந்துள்ளது. 451 இந்தியர்கள் 41 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இதுவரையில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 37 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றுகூறப்படுகிறது 

 

 

Share via