கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் முதலமைச்சர் அறிவிப்பு என்ன ?

by Editor / 24-03-2020 11:31:15am
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் முதலமைச்சர் அறிவிப்பு என்ன ?

முதலமைச்சர் அறிவிப்பு என்ன ?

அத்தியாவசிய பொருட்களுக்கான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர,

 அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அத்தியாவசிய துறைகள், அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

அத்தியாவசிய அவசிய பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ,டாக்ஸி போன்றவை இயங்காது

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.

அத்தியாவசிய மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

தொற்று நோய்கள் சட்டம், 1897-ல் ஷரத்து 2-ன் படி மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சி தலைவர்களும் "குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-ன் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு அறிப்பாணைகள்:

1. அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்

2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி.

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்

6. டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. 5 பேருக்கு மேல் கூட தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம். 

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்

13, அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது

14. உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.

17. அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி

18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை

19. மரண ஊர்திக்கு தடை இல்லை

20. அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்.

Share via