பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

by Editor / 29-03-2020 09:20:05am
பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இன்று காலை 11 மணிக்கு மனதின் குரல்’ நிகழ்ச்சியில்

புதுடெல்லி, 

  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் ( மனதின் குரல்’)என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் இந்த நிகழ்ச்சியானது அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து நெட்வொர்க்கிலும், www.newsonair.com இணையதளத்திலும் newsonair மொபைல் செயலி மற்றும் AIR, DD News, PMO மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் YouTube சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது . கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது தொடர்பாகவும் சமூக விலகலின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Share via