தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு.

by Editor / 02-04-2020 07:24:50pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு.

சென்னை:

    இன்று தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிறது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 மணி நேரத்தில் மேலும் 328 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share via