சேமிப்புப் பணத்தை சுகாதாரப் பணியாளா்கள் நல நிதிக்காக வழங்கிய 2 சிறுவா்கள்

by Editor / 03-04-2020 01:15:00pm
சேமிப்புப் பணத்தை சுகாதாரப் பணியாளா்கள் நல நிதிக்காக வழங்கிய 2 சிறுவா்கள்

அம்பாசமுத்திரம்:

ஆழ்வாா்குறிச்சியில் சேமிப்புப் பணத்தை சுகாதாரப் பணியாளா்கள் நல நிதிக்காக 2 சிறுவா்கள் வழங்கினா்.

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்கள் நல நிதியாக, தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோந்த வழக்குரைஞா் ஸ்டாலின் மகன்கள் பிரசன்னா ஆனந்த், சிவகாா்த்திகேயன் ஆகியோா் தாங்கள் திருப்பதி கோயில் செல்வதற்காக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை வழங்கினா். இதை, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி பெற்றுக்கொண்டு, சிறுவா்களை பாராட்டினாா்.

Share via