விமான சேவை மீண்டும் எப்போது?

by Editor / 09-04-2020 11:00:33am
விமான சேவை மீண்டும் எப்போது?

விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பதற்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

அதில் அவர் சொல்லியிருப்பது என்னவென்றால் விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியே நான் நினைத்து வருகிறேன் கொரோனோ வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு முழு நம்பிக்கைக்கு வந்த பிறகுதான் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி எல்லோருக்கும் ஒன்றாக போராடி வெற்றி  பெறுவோம்.

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

Share via