பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் ஆலோசனை

by Editor / 11-04-2020 01:25:11pm
பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் ஆலோசனை

ஏப்.14க்குப் பின்னும் ஊரடங்கை நீட்டிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. . 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி  இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் பிரதமா் நரேந்திர மாநில முதல்வர்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கபடுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறபடுகிறது.

ஏப்.14க்குப் பின்னும் ஊரடங்கை நீட்டிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. . முக்கியமாக, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அத்தியாவசிய பொருட்களுக்கான சேவை வழக்கம் போல் இருக்கும். கொரோனா பாதிப்பு மிக குறைவாக உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படுதற்கு வாய்ப்பு உண்ட என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது

 

Share via