தமிழக எல்லை கோரோனோ தடுப்பு சோதனை சாவடியில் கேரளா வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

by Editor / 22-04-2020 07:11:41pm
தமிழக எல்லை கோரோனோ தடுப்பு சோதனை சாவடியில் கேரளா வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இந்தியாவில் கொரோனானோ தொற்று நோய் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு மத்திய மாநில,அரசுகள் பல்வேறு அறிவுரைகளையும்,ஆலோசனைகள், எச்சரிக்கைகளையும் தெரிவித்து வருகின்றன. வீட்டில் தனியாக இருக்க வேண்டும். வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர பிற காரியங்களுக்கு செல்லவேண்டாம், தேவையில்லாமல் சுற்றக் கூடாது ,என பல்வேறு விதமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கொரோனா தொற்று நோயிலிருந்து தப்பிக்க வழி முறைகளின் தெரிவித்து வருகிறது. 

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சோதனை சாவடியில் பணியாற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆகியோர்களுக்கு கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை வனத்துறையினர் சார்பில் ஆயிரம் முககவசம்30 க்கும் மேற்பட்ட பாட்டில்கள் சானிட்டேரி மருந்துக்கள் உள்ளிட்டவைகளை அம்மாநில எல்லையிலுள்ள வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.இதில் இருமாநில எல்லையோர பகுதிவனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் கேரளா வனத்துறையினர் தங்களையும் பரிசோதனை செய்துகொண்டனர்.

Share via