அவுரங்காபாத் அருகே சரக்கு  ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

by Editor / 08-05-2020 11:16:08am
அவுரங்காபாத் அருகே சரக்கு  ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

மகாராஷ்டிர மாநிலம்  அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு  ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

மகாராஷ்டிர


கொரோன வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது ரயில் பேருந்து விமானம் ஆகிய அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத நிலையில். வெளி மாநிலங்களில் தங்கியிருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் சிக்கி தவித்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தில் மூலமாக நடந்து சென்றனர் சிறிது நேரம் கழித்து சோர்வடைந்து அவர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர் அப்போது வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் சரக்கு ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மேல் ஏறி சென்றது அதனால் 16 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசு 1ஆம்  தேதி முதலே சிறப்பு ரயில்களை இயக்கி அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பவங்களை அறிந்த அனைத்து தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்

 

Share via