ராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்

by Admin / 17-11-2018
ராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்

தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் ஹீரோக்களாகவும் ஹரிதா, மலர் ஹீரோயின்களாகவும் நடிக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’.

இப்படத்தை புது இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்குகிறார். எப்.ராஜ்பரத் இசை. டேவிட் ஜான் ஒளிப்பதிவு படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் 6 வருடம் சிறப்பு சேவையாற்றினேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் டிப்ளமோ பிலிம் மேக்கிங் படித்து குறும்படம், டெலிபிலிம் இயக்கினேன். தற்போது கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும் திரைப்படத்தை இயக்கி உள்ளேன். காதலியை தொலைத்துவிட்டு தேடும் ஒரு ஹீரோவின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது டிரெய்லர் பாடல்களை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டு வாழ்த்தினார். நண்பர்களால் உருவாகும் எங்கள் படம்போல் நீங்கள் இயக்கிய படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும் என்று வெங்கட்பிரபு வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு இயக்குனர் பாலா தெரிவித்தார்.

Share via