சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட திற்பரப்பு அருவி

by Editor / 16-05-2020 12:46:47pm
சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட திற்பரப்பு அருவி

குமரி

தொடர் மழை காரணமாக குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டு உள்ளதால் திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது, மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததோடு நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, இதனிடையே தொடர் கனமழை காரணமாக குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. பொதுவாக இந்த மாதம் கோடை மாதம் என்பதால் நடந்து செல்ல முடியாத அளவிற்கு திற்பரப்பு அருவி பகுதி சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், உள்ளூர் சுற்றுலா பயணிகள் என யாரும் இல்லாததால் திற்பரப்பு அருவி பகுதி முழுவதும் வெறிச்சோடி கலை இழந்து காணப்படுகிறது.

Share via