இன்று ஊதா கலர் டோக்கனுக்கு சரக்கு.. உற்சாகத்தில் தெறிக்கும் ”குடி”மகன்கள்

by Editor / 16-05-2020 07:58:14pm
இன்று ஊதா கலர் டோக்கனுக்கு சரக்கு.. உற்சாகத்தில் தெறிக்கும் ”குடி”மகன்கள்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து தமிழகத்தில் சென்னைத் தவிர டாஸ்மாக் கடைகள் இன்று காலை

10 மணிக்கு திறக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு ஒரு கலர் வீதம் டோக்கன் சிஸ்டத்துடன் இன்று டாஸ்மாக் கடைகளில் சரக்கு வழங்கப்பட்டது. முன்னதாக நாளொன்றுக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அவ்வாறு வாங்கப்பட்ட டோக்கனில் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் எண் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் டோக்கன் வாங்கவோ, சரக்கு வாங்கவோ வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சரக்கு வாங்க ஆதார் கட்டாயம் என்கிற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடதக்கது. வழக்கம் போல் டோக்கன் வாங்கவும், சரக்கு வாங்கவும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

 

Share via