குற்றாலத்தில் மதுப்பாட்டில் களில் சரக்கை குடிக்கும் குரங்குகள்.

by Editor / 21-05-2020 10:10:44am
குற்றாலத்தில்  மதுப்பாட்டில் களில்  சரக்கை குடிக்கும் குரங்குகள்.

தென்காசி மாவட்ட குற்றாலம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான வானரங்கள் அழைக்கப்படும் குரங்குகள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் ஜூலை, ஆகஸ்ட், ஆகிய 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும் இந்த காலங்களில் இங்கு வரும் சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட்டு போடும் உணவுகளை நம்பியே இங்கு வசிக்கும் குரங்குகள் உள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும் கொடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.அதே சமயம் கொரோனா காரணமாக குற்றால அருவி களில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில் குரங்குகள் உணவுக்கும் நீருக்கும் அலைந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் வாழும் குரங்குகளுக்கு உணவுகள் இல்லாமல் சாலைகளில் கிடைக்கிறதா என்று சென்று தவித்து வந்த நிலையில் அந்த பகுதியில் குடிமகன்கள் குடித்துவிட்டு போடப்பட்ட சாலை ஓரங்களில் கிடைக்கும் மது பாட்டில்களில் தூக்கி அதில் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் சரக்குகளை குரங்குகள் குடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இதனால் குரங்கினங்களுக்கு ஆபத்து உருவாகி உள்ளது.

Share via