தென்காசி மாவட்டத்தின் அணைத்து பகுதிகளிலும் ஊரின் முக்கிய நபர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகளிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

by Editor / 21-05-2020 10:42:21am
தென்காசி மாவட்டத்தின் அணைத்து பகுதிகளிலும் ஊரின் முக்கிய நபர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகளிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி,தென்காசி மாவட்டத்தின்  அணைத்து ஊர்களின் முக்கிய நபர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகளுக்கு அந்தந்த காவல் நிலையத்தின் சார்பில் கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் தற்போது வேகமாக கொரோனா பரவி வருவதால் மக்கள் அனைவரும் அரசிற்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் மேலும் தங்களின் ஊருக்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து யாரேனும் புதிய நபர்கள் வந்தால் உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவிக்கவேண்டும்  எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதேபோல் விழிப்புணர்வு கூட்டம் மாவட்டத்தின் அணைத்து இடங்களிலும் காவல் துறையினரின் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.

Share via