நடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்

by Editor / 17-11-2018
நடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்

தமிழில் வெளியான ‘நோட்டா’ படத்தில் நடித்தவர் விஜய்தேவரகொண்டா. தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் டாக்ஸி வாலா படத்தில் நடித்து முடித்தார். இப்படம் நாளை 17ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக கடந்த 14ம் தேதியே இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டுத்தனமாக படம் வெளியிடப்பட்டதற்கு விஜய் தேவரகொண்டா கண்டனம் தெரிவித்ததுடன் நடிப்புக்கு முழுக்குபோடவும் எண்ணியதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,’இப்படத்திற்காக கடுமையான உழைப்பை நான் மட்டுமல்ல படத்தில் பணியாற்றிய அனைவரும் வழங்கியிருக்கிறோம். இப்பட ஒளிப்பதிவாளர் தோள்பட்டையில் 20 கிலோ எடை கொண்ட கேமராவை சுமந்தபடி காட்சிகளை படமாக்கினார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் இந்த தொழிலைவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிடுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கின்றனர். படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் பிஜாய்ஸின் தந்தைக்கு கேன்சர் பாதித்திருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சையை அவர் சென்னையில் பெற்றுவந்தார். தந்தையை பார்த்துக்கொள்வதற்காக இசை அமைப்பாளர் கொச்சி, சென்னை, ஐதராபாத் என அடிக்கடி சென்று வரவேண்டியிருந்தது. இந்த டென்ஷனுக்கு இடையில்தான் அவர் இசை அமைத்து ெகாடுத்தார். நான் இதன் படப்பிடிப்பில் இருந்தபோது எனது அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தேன். அதனால் என் மனம் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பாதிப்போடு படப்பிடிப்பில் பங்கேற்றேன். ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிடலாம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் பெற்றிருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்துவிடலாம் என்று கூட எண்ணினேன். இவ்வளவு கடின உழைப்பையும் கணக்கில் கொள்ளாமல் படத்தை திருட்டு தனமாக வெளியிடுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறினார்.

Share via