கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உள்ள 4-வது கிரிக்கெட் வீரர்

by Editor / 25-05-2020 10:11:42am
கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உள்ள 4-வது கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தவுபிக்,  உமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இடது கை பேட்ஸ்மேனான இவர்,2001 முதல் 2014-ம்  காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக 44 டெஸ்டுகளில் விளையாடி 7 சதம் உள்பட 2,963 ரன்கள் எடுத்தவரான 38 வயதான தவ்பீக் உமர் கூறுகையில், ‘முந்தைய நாள் இரவு லேசான காய்ச்சலுடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனை அடுத்து என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆனால் கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் சீக்கிரம் குணமடைய அனைவரும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்

 

Share via