அஜீத் புது படம் இயக்குவது யார்?

by Staff / 17-11-2018
அஜீத் புது படம் இயக்குவது யார்?

சிவா இயக்கத்தில், ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு வெளி நாட்டிலும் மற்றும் சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலும் நடந்தது. அஜீத்தின் 58வது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. அடுத்து அஜீத்தின் 59வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கியவர். மேலும் அஜீத் நடிக்கும் புதிய படம், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்றும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டதுடன், வினோத் பெயரில் உள்ள ஒரு டுவிட்டரில் தல 59 ரீமேக் இல்லை என்றும் ஒரு தகவல் வெளியானது.

அஜீத் புது படம் இயக்குவது யார்?

இதுகுறித்து இயக்குனர் வினோத் விளக்கம் அளித்துள்ளார். அதில்,’எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.