தமிழகத்தில் முதன் முறையாக எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

by Editor / 10-06-2020 09:31:15am
தமிழகத்தில் முதன் முறையாக எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன்

தமிழகத்தில் முதன் முறையாக எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

தனது பிறந்த நாளிலேயே, மறைந்த ஜெ.அன்பழகன்:

கொரானோ தொற்று காரணமாக கடந்த 2-ஆம் தேதி ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் இன்று காலை 8.05 மணியளவில் உயிரிழந்தார்._  

1958 ஜூன் 10- ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்தநாள்._

ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்றிருந்தது. திமுகவில் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜெ அன்பழகன்.

ஜெ.அன்பழகன் காலை 8 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு உட்பட உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தொற்றுநோய் விதிகளின் படி ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மறைந்த ஜெ.அன்பழகனுக்கு ஒரு மகன்; ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்

Share via