தமிழகம் முழுவதும் ஊரடங்கு?

by Editor / 12-07-2020 10:05:12am
தமிழகம் முழுவதும் ஊரடங்கு?

சென்னை:

மிழகத்தில் ஜூலை 31ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் பெரும்பாலான நகராட்சிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

இது மட்டுமல்லாமல் வணிகர் சங்கங்கள் கடைகளை திறக்கும் நேரத்தை மிகவும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் சென்னையை தவிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்படாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

Share via