ரசிகன் இயக்க... நண்பன் தயாரிக்க... ‘தேவ்’ கார்த்தி ரெடி!

by Others / 17-11-2018
ரசிகன் இயக்க... நண்பன் தயாரிக்க... ‘தேவ்’ கார்த்தி ரெடி!

கார்த்திதான் இப்போ வெரைட்டியா நடிக்கிற நடிகர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பா, விரைப்பான போலீஸ் அதிகாரி லுக்குக்கு மாறியிருந்தார். அடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக வெயிட்டெல்லாம் ஏத்தி மாஸ் காட்டியிருந்தார். இப்போ ‘தேவ்’ படத்துக்காக செம ஸ்டைலிஷா, யூத்தா மாறியிருக்கிறார்” என்று பரவசத்தோடு சொல்லி நெகிழ்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்.

ரசிகன் இயக்க... நண்பன் தயாரிக்க... ‘தேவ்’ கார்த்தி ரெடி!

பத்து வருஷம் உதவி இயக்குநர், இணை இயக்குநர்னு சினிமால படிப்படியா எல்லா விஷயங்களும் கத்துக்கிட்டேன். எழுதுறது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுக்காக நான் எழுத்தாளருன்னு சொல்லிக்க வர்ல. ஆனா சின்ன வயசுலேருந்தே நிறையக் கதைகள் எழுதுவேன். உதவி இயக்குநரா டே & நைட் ஒர்க்லே ஓடிக்கிட்டு இருக்கிறப்போவும் இடையே நேரம் எடுத்து கதைகள் எழுதுவேன். இனி டைரக்‌ஷன் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணினப்போ எழுதின கதைதான் ‘தேவ்’ என்கிற படமா வளருது. எப்படி இதில் கார்த்தி வந்தார்?” “தயாரிப்பாளர் லஷ்மன் சார்கிட்ட கதை சொல்ற வாய்ப்பு அமைஞ்சது. அவர் கார்த்தியோட கிளாஸ்மேட். ‘பருத்தி வீரன்’ படத்துலேருந்து நான் கார்த்தியோட விசிறி. அவரை எப்படி ஒரு ரசிகனா ஸ்டைலான லுக்ல பார்க்க விரும்பினேனோ அப்படியான ஹீரோதான் ‘தேவ்’. அதனால இதுல கார்த்தி நடிக்கணும்கிறதுல நான் தெளிவா இருந்தேன். லஷ்மன் சார் மூலமா கார்த்தியை பார்த்தும் கதை சொன்னேன். அவர் உடனே ஓக்கே சொல்கிறவர் கிடையாது. அவரே உதவி இயக்குனரா இருந்தவருதானே? அவருக்கு கதை முழுசா திருப்தி தந்தால்தான் ரெடி ஆவார். ‘தேவ்’ கதை அவருக்கு பிடிச்சிருந்தது. படம் இப்படித்தான் ஸ்டார்ட் ஆச்சு.’’ “ஆக்‌ஷன் திரில்லரா பண்ணியிருக்கீங்களா?” “கதையைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இது ஆக்‌ஷன் அட்வெஞ்சர்தான். ஆனால் படத்தோட கதை சொல்ற விதம், அப்ரோச் எல்லாமே வித்தியாசமா இருக்கும். தேவ் அப்படிங்கிற கேரக்டரை சுற்றிய கதைதான். அவரோட வாழ்க்கையில நடக்கிற காதல், எமோஷன், அவரோட நண்பர்கள், ஃபேமிலி, அவர் என்ன மாதிரியான பிரச்னையை எதிர்கொள்கிறார். அதை எப்படி அவர் டீல் செய்கிறாருங்கிறதை சொல்ற படம்தான். சமூகம் சார்ந்த ஒரு பார்வையும் படத்துல இருக்கும். ஆனா அதுதான் கதை கிடையாது. ஒரு பாய் நெக்ஸ்ட் டோருக்கு உண்டான கேரக்டரை சுற்றிய கதைதான். நமக்குள்ள நிறைய சந்தோஷம், கோபம் இருக்கும். நாம படிச்சு, நம்மோட வாழ்க்கையை முதல்ல ஒரு வடிவம் தர நினைப்போம். எடுத்ததுமே சமூக பிரச்னையை நோக்கி போயிட மாட்டோம். அல்லது இன்னொருத்தரு லைஃப்ல நுழைய மாட்டோம். அப்படிப்பட்ட ஒருத்தன் தான் ‘தேவ்’ படத்தோட ஹீரோ.’’ “இப்படியொரு வாழ்க்கை வாழுறேன். ஆனா வாழ்க்கையை இப்படியும் வாழலாம்னு தான் விரும்பியதை நோக்கி போற மாதிரியான காட்சிகளை படத்தோட டீசர்ல வச்சிருக்கீங்க?” “ஆமாம். உலகத்துலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடா நம் நாடு இருக்கு. நானும் இளைஞன்தான். நான் பார்த்த பார்க்கிற விஷயங்கள், என்னைச் சுத்தி இருக்கிற நண்பர்களோட வாழ்க்கை இதையெல்லாம் பார்த்து நான் புரிஞ்சிக்கிட்டது. இன்னிக்கு இருக்கிற இளைஞர்கள், இன்ஜினியரா ஆகணும் டாக்டரா ஆகணும்னு மட்டுமே நினைச்சிட்டு அதை நோக்கி போகல. அதே சமயம், வாழ்க்கையை எந்த ரூட்டும் இல்லாம வாழ்ந்திடணும்னு தறிகெட்டு போகல. அதுதான் உண்மை. பணம் அதிகம் அதிகமா சேர்த்து வைக்கணும்னு நினைக்கல. நல்ல மனிதநேயத்தோட வாழணும். சென்சிபிளா வாழணும்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் 90 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறாங்க. அப்படிப்பட்ட இளைஞர்களை பற்றித்தான் படமா எடுக்க விரும்பினேன். அந்த விஷயத்துல ஒரு அங்கிள்தான் டீசர்ல பார்த்தது. படத்துல நிறைய இருக்கு.’’ “படத்துல கார்த்தி யூஸ் பண்ற பைக் வித்தியாசமா இருக்கு. அவரை பார்த்தா பைக் ரேஸரா தெரியுறாரே?” “பைக் ரேஸர் கிடையாது. அவர் பண்ணக்கூடிய அட்வெஞ்சர்ல இது ஒரு வகையான அட்வெஞ்சரா இருக்கும். படத்துல முக்கியமான ஒரு கட்டத்துல அந்த பைக் சீன் வரும். அது ஒரு முக்கியமான கேரக்டர்னு கூட சொல்லலாம். கதையை கேட்ட பிறகு தயாரிப்பாளர் லக்‌ஷமன் இந்த காட்சிக்காக ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்த பிஎம்டபிள்யூ ஃபாரின் பைக்கை வாங்கிட்டார். நாங்க யாரும் இதை எதிர்பார்க்கல. நான் சாதாரண பைக்தான் கேட்டேன். ஆனா கதைக்கு இந்த மாதிரி ரிச்னஸ் தேவைப்படுறதால இப்படித்தான் இருக்கணும்னு தயாரிப்பாளர் தீர்மானமா இருந்தார்.’’ “நிறைய டிராவல் பண்ணிட்டு வந்திருக்கீங்க. அது பற்றி சொல்லுங்க?” “கிட்டத்தட்ட 40 ஆயிரம் கி.மீ. தூரம் இந்த படத்துக்காக டிராவல் பண்ணியிருக்கோம். உக்ரைன், டெல்லி, மணாலி, ஐதராபாத், மும்பை, சென்னைன்னு எல்லா இடத்துலேயும் இதுவரை பார்க்காத லொகேஷன்கள்ல ஷூட் பண்ணினோம். கதையோட தேவைக்காகத்தான் இந்த டிராவல். காட்சிகளோட ரிச்னஸுக்காகவும் சொல்லலாம். காரணம், ஆடியன்ஸ் ரொம்பவே ஃபிரஷ்ஷான விஷயங்களைத்தான் எதிர்பார்க்கிறாங்க. நாங்களே ஆடியன்ஸா இருந்துதான் சினிமாவுக்கு வந்திருக்கோம். சினிமா எடுக்க என்னையெல்லாம் ஆர்வப்படுத்தியது மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனனோட படங்களோட விஷுவல்தான். அவங்க பண்ணின விஷயங்கள் நமக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கும் இல்லியா? இப்படியொரு படம் எடுக்கணும்னு விரும்பி எடுத்திருக்கிற படம்தான் இது. அதுல அந்த பைக், காஸ்டியூம்ஸ், லொகேஷன்னு எல்லாமே இன்றைய இளைஞர்களையும் அவங்களோட விருப்பத்தையும் பிரதிபலிக்கிற மாதிரிதான் எல்லாமே இருக்கும்.’’ “கார்த்தியோட ஒத்துழைப்பு?” “அவர் எனக்கு அண்ணன் மாதிரி. நிறைய விஷயங்கள்ல தோள்ல தட்டிக் கொடுப்பார். பல முறை அன்பா நிறைய விஷயங்கள் சொல்வார். எல்லாமே நமக்கு செம எனர்ஜி கொடுக்கும். காரணம், அவரே உதவி இயக்குனரா இருந்துதான் நடிக்க வந்திருக்கிறார். அதனால டைரக்டரோ வலி அவருக்கு தெரியும். டைரக்டர் என்ன விரும்புறார், என்ன எதிர்பார்க்கிறாருங்கிறது உடனே தெரிஞ்சுக்குவார். நானுன்னு கிடையாது. அவர் கூட ஒர்க் பண்ணின எந்த டைரக்டர்கள்கிட்ட கேட்டாலும் அவரை பற்றி சொல்லுவாங்க. அதாவது அவர்கிட்ட கிளாரிட்டி இருக்கும். ஒரு கதைன்னா அதை எப்படி கொண்டு போகணும், விஷுவல் சென்ஸ் அவர்கிட்ட இருக்கு. அதுதான் படத்துக்கு ரொம்ப முக்கியமானது. அதுல டைரக்டர்களோட வேலை ஈஸியாகும். நடிகரா அவர் அந்த கேரக்டருக்காக தன்னை முழுசா மாத்திக்குவார். கடைக்குட்டி சிங்கத்துக்காக 15 கிலோ எடை கூடியிருந்தார். இந்த கேரக்டருக்காக திரும்ப எப்படி யூத்ஃபுல்லான லுக்குக்கு மாறுவாருன்னு பலரும் கேட்டாங்க. நான் அவர்கிட்ட நான் பண்ணி வச்சிருந்த ஸ்கெட்ச்சை காட்டினேன். நான் இந்த மாதிரி உங்களை பார்க்க விரும்புறேன். 25 வயசு இளைஞன் கேரக்டர் இது. இதுக்கு இப்படி இருக்கணும்னு சொன்னப்போ, அதுக்காக டயட் இருந்து, உடற்பயிற்சி செஞ்சு 45 நாள்ல தன்னை மாத்திக்கிட்டு வந்து நின்னார். அந்த டெடிகேஷன் அமேஸிங்னுதான் சொல்லணும்.” “அதே சமயம் ஸ்கிரிப்ட் படிக்கும்போதே நிறைய கரெக்‌ஷன் சொல்லுவார், நிறைய மாற்றம் செய்வாருன்னும் கார்த்தியை பற்றி சொல்றாங்களே?” “கரெக்‌ஷன், மாற்றம் அப்படிங்கிறதையெல்லாம் நான் பாசிட்டிவா பாக்குறேன். ஏன்னா, இன்னிக்கு இருக்கிற டிரெண்ட்ல மக்களே விமர்சகர்களா இருக்கிறாங்க. ஒரு படம் வெளியாகும்போது யார் வேணும்னாலும் வீடியோ போட்டு விமர்சனம் பண்ணலாம்கிற நிலை இருக்கு. இது பாசிட்டிவ்வான விஷயம்தான். நமக்கு ஒரு பயம் வருது. ஒரு விமர்சனம் கேட்கும்போதும் கமென்ட்டுகள் படிக்கும்போதும் நாம பொறுப்போட படம் எடுக்கணும்னு தோணுது. மக்களோட கருத்தையெல்லாம் இப்படி நாம கேட்கும்போது, நம்ம கூட டீமா ஒர்க் பண்றவங்களோட கருத்தை கேட்கிறதுல தப்பு கிடையாதே?” “ரகுல் பிரீத் சிங் பற்றி சொல்லலியே?” “ஏற்கனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துலே ஹிட்டடிச்ச ஜோடிதான். திரும்ப கார்த்திக்கு அவர் ஜோடியா நடிக்கிறதுக்கு அந்த சக்ஸஸ் காம்பினேஷன்தான் காரணம். அதுலேயே அவங்க ரெண்டு பேர் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். இதுலேயும் அது ரிபீட் ஆகியிருக்கு. ஜஸ்ட் ஹீரோயின் கேரக்டர் மாதிரி அவங்க ரோல் இருக்காது. கார்த்திக்கு இணையான படம் முழுக்க வர்ற கேரக்டர்தான் அவங்களுக்கும். அதே சமயம் அவங்களோட கேரக்டரை விட கொஞ்சம் ஹைட்ல கார்த்தி கேரக்டர் இருக்கும்