குக் வித் கோமாளி புகழ் திறக்க வந்த செல்போன் கடைக்கு சீல்

by Editor / 14-04-2021 05:49:23pm
குக் வித் கோமாளி புகழ் திறக்க  வந்த  செல்போன் கடைக்கு சீல்

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற செல்போன்  கடையின் கிளை வண்ணாரப்பேட்டை பகுதியில் திறக்கப்படவுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில்,  திறப்பு விழாவிற்கு விஜய் டிவி புகழ் குக்வித் கோமாளி நடிகர் புகழை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்த நிலையில், அவர் நெல்லை  வண்ணாரப்பேட்டைக்கு வந்திருந்தார்.புகழ் வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் அங்கு குவிந்த நிலையில், இதனால் அக்கடைக்கு முன்பாக ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இந்த கடையின் திறப்பு விழா தொடர்பாக மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் கடை நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கடைக்கு வந்து ரசிகர்களை விரட்டியடித்த நிலையில், காரில் அங்கு வந்த புகழை காரில் இருந்தபடியே பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், கடைக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சீல் வைத்தனர்.

 

Tags :

Share via