மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதி

by Editor / 17-04-2021 04:03:02pm
மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதி

 

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான
 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. மொத்த 45 தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு நடந்த து. மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே, 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்குபதிவில் தங்கள் வாக்கினை செலுத்த உள்ளனர். டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது..

 

Tags :

Share via