விழுப்புரம்: முதியவரிடம் ரூ. 5.65 லட்சத்தை ஏமாற்றிய பெண்! - சிசிடிவி உதவியால் பிடித்த போலீஸ்

by Editor / 18-04-2021 11:23:41am
விழுப்புரம்: முதியவரிடம் ரூ. 5.65 லட்சத்தை ஏமாற்றிய பெண்! - சிசிடிவி உதவியால் பிடித்த போலீஸ்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு, வங்கி சேமிப்பு இருப்புத் தொகையை சோதித்து தருவதாக கூறி முறைகேடாக 5.65 லட்சத்தை சுருட்டிய திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண், விழுப்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நாளுக்கு நாள் பண மோசடி புகார்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. டெபிட் கார்டுகள் தொடங்கி ஆன்லைன் முறை மோசடி என பல வகையிலும் நடைபெறுகிறது. 'வங்கிகணக்கு விஷயத்தில் கவனமாக இருங்கள்' என ஆர்.பி.ஐ கூறும் வழிகாட்டு நெறிமுறைகள் கடைக்கோடி மனிதன் வரை சென்று சேர்கிறதா என்றால்... இல்லை என்பதற்கு ஆதாரமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஏ.வடமலை. கடந்த மாதம் 9 ம் தேதி (09.03.2021) அன்று விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் தனது வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு தொகையை அறிந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு புடவை அணிந்து வந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தில் சேமிப்புத் தொகையை அறிந்துகொள்ள உதவுவதாக கூறி, ஏ.டி.எம் கார்டை பெற்று சேமிப்பு கணக்கிலுள்ள தொகையை சோதித்து கூறிவிட்டு மீண்டும் தரும்போது மாற்று ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏமாற்றி விட்டார் என்றும், ஒரு மாத கால இடைவெளியில் ஏமாற்றிய தன்னுடைய ஏ.டி.எம் கார்டு மூலம் சிறுகச்சிறுக மொத்தமாக 5.65 லட்ச ரூபாயை வங்கி கணக்கிலிருந்து எடுத்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அம்முதியவர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 406, 420, 380 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஏ.டி.எம் மையத்தில் கிடைத்த சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் காவல்துறையினர். சி.சி.டிவி வீடியோவில் இருந்த பெண் திருச்சி மாவட்டம், மனச்சநல்லூர் அஞ்சலுக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான ரா.சீதாலட்சுமி என கண்டறிந்தது. பின், விழுப்புரம் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் அருகே நின்றிருந்த அப்பெண்ணை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
அவரிடமிருந்து தங்கத்திலான செயின், அட்டிகை, பிரேஸ்லெட் என மொத்தம் 108.45 கிராம் (13.55 பவுன்) எடையுள்ள 5,02,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களும், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்துள்ளனர். பின், அப்பெண் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் பெண்கள் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via