சர்கார் - விமர்சனம்

by Admin / 17-11-2018
சர்கார் - விமர்சனம்

Murugadoss Arunasalam, commonly known with his stage name Murugadoss, is an Indian film director, producer, and screenwriter. He is best known for his action Tamil films and Telugu films and for remaking them in Hindi cinema.

அமெரிக்காவில் ஜிஎல் நிறுவனத்தில், வருடத்துக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் மான்ஸ்டர், விஜய். அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும், போட்டி நிறுவனங்களை ஆட்டம் காணச் செய்பவர். அவர், தேர்தலின்போது ஓட்டு போடுவதற்கு இந்தியா வருவது வழக்கம். இந்தமுறை சென்னை திருவல்லிக்கேணி தொகுதிக்கு வரும்போது, அவரது ஓட்ைட வேறு யாரோ ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டு சென்ற விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனே நீதிமன்றம் சென்று, வழக்கில் ஜெயிக்கிறார். இந்த விஷயம் மீடியாவிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிறது. இதன் தாக்கமாக நடக்கும் எதிர்பாராத சம்பவத்தால் நாடே பரபரப்பாகிறது. இதனால் பழ.கருப்பையாவின் அஇமமுக கட்சி, ஆட்டம் காண்கிறது. அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் அவர்கள், விஜய்யை குடும்பத்துடன் அழிக்க சதி செய்கின்றனர். அந்த அரசியல்வாதிகளின் சதியை விஜய் தன் திறமையால் எப்படி வெல்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பதை ஆக்‌ஷன் திரில்லுடன் சொல்கிறது சர்கார். 49ஓ (நோட்டா) பற்றி தெரியும். இதில் 49பி விதி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது படம். சமூக அவலங்களை தோலுரித்து காட்டிய விதத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகி விடுகிறது சர்கார். ‘தனக்கு எதிராளியே இல்லை என்ற நினைப்புதான் ஜனநாயகத்தின் பெரிய ஆபத்து’, ‘இங்கு பிரச்னைக்கு தீர்வு, இன்னொரு பிரச்னைதான்’, ‘20 சதவீத மக்கள்தான் 100 சதவீத மக்களை யார் ஆள வேண்டும் என முடிவு செய்கிறார்கள். அதனால் 100 சதவீத மக்களும் வாக்களிக்க வேண்டும்’ என்ற கூர்மையான, சமூக பார்வையுடன் கூடிய வசனங்கள் படம் முழுக்கவே நிரம்பியிருக்கிறது. பணத்துக்கு வாக்களித்து விட்டு, பிறகு எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலையில் இருக்கும் பொதுமக்களை சிந்திக்க வைக்கிறது படம். சர்காரில் விஜய்யின் அதிரடி ஆட்டத்துக்கு சலங்கை கட்டிவிட்டு இருக்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ். எதிரியின் கோட்டைக்குள்ளேயே தைரியமாக புகுந்து பொளப்பதில் இருந்து, தன் மீது பெரும் கோபம் கொண்டு நிற்கும் பொதுமக்களை தன் பக்கம் இழுக்கும் பக்குவம் வரை, உண்மையிலேயே விஜய் இதில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரு கைகளையும் பறவையின் இறகு போல் காட்டுவது, ஒரு விரல் காட்டி உரையாற்றுவது, அதிகார வர்க்கத்துக்கு எதிராக கோஷமிடுவது என, அவர் காட்டும் விதவிதமான மேனரிசங்கள் எல்லாமே விஜய் பிராண்டின் புதிய அம்சங்கள். அந்த காட்சிகளுக்கு தியேட்டரே அதிரி புதிரியாகிறது. கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தில் மிஞ்சிய ஒரு பிஞ்சுவை காப்பாற்ற கலங்குவது, உருக்கம். படம் முழுவதும் சர்காரை ஆளும் ஒன்மேன் ஆர்மியாக மாறியிருக்கிறார், விஜய். விஜய்யின் உறவுப் பெண்ணாக வந்து, ‘தங்களுக்கு என் மீது ஈர்ப்பு இருக்கிறதா?’ என்று காதல் மொழி பேசி, இளம் ரசிகர்களை கவர்கிறார் கீர்த்தி சுரேஷ். வில்லித்தனத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார், வரலட்சுமி. ‘அவன் கார்ப்பரேட் கிரிமினல். அவன்கிட்ட எதுவும் வெச்சிக்காதீங்க’ என்று, வெளிநாட்டில் இருந்து தன் தந்தை பழ.கருப்பையாவை எச்சரிப்பதும், பிறகு நேராக களத்துக்கு வந்து, ‘நீ கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினல்’ என்று ேமாதுவதுமாக, வரலட்சுமி ஆங்கார லட்சுமியாக மாறி வலம் வந்திருக்கிறார். சிரித்துக்கொண்டே வன்மம் காட்டும் அரசியல் தலைவர் வேடத்துக்கு தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் பழ.கருப்பையா. தனது கட்சியின் கூட்டத்துக்கு வந்த விஜய்யிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு, முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க மேடையில் இருந்து இறங்கி செல்லும் காட்சியில், அப்படியொரு யதார்த்த நடிப்பு. நம்பர் 2 என்ற கேரக்டரில் ராதாரவி. ‘அவன் பொடிப்பய’ என்று விஜய்யை விமர்சித்து விட்டு, பிறகு விஜய்யின் அதிரடி செயல்களை பார்த்து மிரண்டு நிற்கும் காட்சிகளில், நடிப்பு அனுபவம் பேசியிருக்கிறது. கள்ள ஓட்டு போடுபவராக வரும் யோகி பாபு, தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒரு ஓட்டால் என்ன மாற்றம் வந்து விடும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு ஓட்டால்தான் ஆங்கில மொழிக்கு அங்கீகாரம் கிடைத்தது. பிரான்ஸ் ஜனநாயக நாடானது. ஹிட்லர் ெஜயித்தார்’ என்று விஜய் புள்ளி விவரத்துடன் பதில் சொல்லும்போதும், தன்மீது வீசப்பட்ட தக்காளியை கையில் வைத்துக்கொண்டு, தக்காளிக்கு பின்னால் இருக்கும் அரசியலை விஜய் விவரிக்கும்போதும், முருகதாஸ் - ஜெயமோகன் வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, மிரட்டல் ரகம். தேவைப்படும் இடங்களில் எல்லாம், ‘ஒரு விரல் புரட்சி’ என்ற பாடலையே பின்னணி இசையாக்கி பரபரப்பு கூட்டியிருக்கிறார். டாப்பு டக்கர், சிம்டாங்காரன் உள்பட அனைத்து பாடல்களுமே ரசிகர்களை ஈர்க்கிறது. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு காட்சிகளில் வெவ்வேறு டோன்கள். சண்டைக் காட்சிகளில் அவரது கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அரசியல்வாதிகள் பின்னும் சதிவலைகளை விஜய் தகர்ப்பதும், வரலட்சுமியின் வலைக்குள் சிக்கித் தவித்து, கடைசி நிமிடத்தில் அதையும் தாண்டி வெளியில் வருவதுமான ஏ.ஆர்.முருகதாஸின் பரபரப்பான திரைக்கதை, ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும், இந்த பிரச்னையை விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற படபடப்பும் ரசிகர்களை ஆட்கொள்கிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் ஜெயிக்கிறது இந்த சர்கார்.அமெரிக்காவில் ஜிஎல் நிறுவனத்தில், வருடத்துக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் மான்ஸ்டர், விஜய். அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும், போட்டி நிறுவனங்களை ஆட்டம் காணச் செய்பவர். அவர், தேர்தலின்போது ஓட்டு போடுவதற்கு இந்தியா வருவது வழக்கம். இந்தமுறை சென்னை திருவல்லிக்கேணி தொகுதிக்கு வரும்போது, அவரது ஓட்ைட வேறு யாரோ ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டு சென்ற விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனே நீதிமன்றம் சென்று, வழக்கில் ஜெயிக்கிறார். இந்த விஷயம் மீடியாவிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிறது. இதன் தாக்கமாக நடக்கும் எதிர்பாராத சம்பவத்தால் நாடே பரபரப்பாகிறது. இதனால் பழ.கருப்பையாவின் அஇமமுக கட்சி, ஆட்டம் காண்கிறது. அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் அவர்கள், விஜய்யை குடும்பத்துடன் அழிக்க சதி செய்கின்றனர். அந்த அரசியல்வாதிகளின் சதியை விஜய் தன் திறமையால் எப்படி வெல்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பதை ஆக்‌ஷன் திரில்லுடன் சொல்கிறது சர்கார். 49ஓ (நோட்டா) பற்றி தெரியும். இதில் 49பி விதி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது படம். சமூக அவலங்களை தோலுரித்து காட்டிய விதத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகி விடுகிறது சர்கார். ‘தனக்கு எதிராளியே இல்லை என்ற நினைப்புதான் ஜனநாயகத்தின் பெரிய ஆபத்து’, ‘இங்கு பிரச்னைக்கு தீர்வு, இன்னொரு பிரச்னைதான்’, ‘20 சதவீத மக்கள்தான் 100 சதவீத மக்களை யார் ஆள வேண்டும் என முடிவு செய்கிறார்கள். அதனால் 100 சதவீத மக்களும் வாக்களிக்க வேண்டும்’ என்ற கூர்மையான, சமூக பார்வையுடன் கூடிய வசனங்கள் படம் முழுக்கவே நிரம்பியிருக்கிறது. பணத்துக்கு வாக்களித்து விட்டு, பிறகு எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலையில் இருக்கும் பொதுமக்களை சிந்திக்க வைக்கிறது படம். சர்காரில் விஜய்யின் அதிரடி ஆட்டத்துக்கு சலங்கை கட்டிவிட்டு இருக்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ். எதிரியின் கோட்டைக்குள்ளேயே தைரியமாக புகுந்து பொளப்பதில் இருந்து, தன் மீது பெரும் கோபம் கொண்டு நிற்கும் பொதுமக்களை தன் பக்கம் இழுக்கும் பக்குவம் வரை, உண்மையிலேயே விஜய் இதில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரு கைகளையும் பறவையின் இறகு போல் காட்டுவது, ஒரு விரல் காட்டி உரையாற்றுவது, அதிகார வர்க்கத்துக்கு எதிராக கோஷமிடுவது என, அவர் காட்டும் விதவிதமான மேனரிசங்கள் எல்லாமே விஜய் பிராண்டின் புதிய அம்சங்கள். அந்த காட்சிகளுக்கு தியேட்டரே அதிரி புதிரியாகிறது. கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தில் மிஞ்சிய ஒரு பிஞ்சுவை காப்பாற்ற கலங்குவது, உருக்கம். படம் முழுவதும் சர்காரை ஆளும் ஒன்மேன் ஆர்மியாக மாறியிருக்கிறார், விஜய். விஜய்யின் உறவுப் பெண்ணாக வந்து, ‘தங்களுக்கு என் மீது ஈர்ப்பு இருக்கிறதா?’ என்று காதல் மொழி பேசி, இளம் ரசிகர்களை கவர்கிறார் கீர்த்தி சுரேஷ். வில்லித்தனத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார், வரலட்சுமி. ‘அவன் கார்ப்பரேட் கிரிமினல். அவன்கிட்ட எதுவும் வெச்சிக்காதீங்க’ என்று, வெளிநாட்டில் இருந்து தன் தந்தை பழ.கருப்பையாவை எச்சரிப்பதும், பிறகு நேராக களத்துக்கு வந்து, ‘நீ கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினல்’ என்று ேமாதுவதுமாக, வரலட்சுமி ஆங்கார லட்சுமியாக மாறி வலம் வந்திருக்கிறார். சிரித்துக்கொண்டே வன்மம் காட்டும் அரசியல் தலைவர் வேடத்துக்கு தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் பழ.கருப்பையா. தனது கட்சியின் கூட்டத்துக்கு வந்த விஜய்யிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு, முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க மேடையில் இருந்து இறங்கி செல்லும் காட்சியில், அப்படியொரு யதார்த்த நடிப்பு. நம்பர் 2 என்ற கேரக்டரில் ராதாரவி. ‘அவன் பொடிப்பய’ என்று விஜய்யை விமர்சித்து விட்டு, பிறகு விஜய்யின் அதிரடி செயல்களை பார்த்து மிரண்டு நிற்கும் காட்சிகளில், நடிப்பு அனுபவம் பேசியிருக்கிறது. கள்ள ஓட்டு போடுபவராக வரும் யோகி பாபு, தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒரு ஓட்டால் என்ன மாற்றம் வந்து விடும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு ஓட்டால்தான் ஆங்கில மொழிக்கு அங்கீகாரம் கிடைத்தது. பிரான்ஸ் ஜனநாயக நாடானது. ஹிட்லர் ெஜயித்தார்’ என்று விஜய் புள்ளி விவரத்துடன் பதில் சொல்லும்போதும், தன்மீது வீசப்பட்ட தக்காளியை கையில் வைத்துக்கொண்டு, தக்காளிக்கு பின்னால் இருக்கும் அரசியலை விஜய் விவரிக்கும்போதும், முருகதாஸ் - ஜெயமோகன் வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, மிரட்டல் ரகம். தேவைப்படும் இடங்களில் எல்லாம், ‘ஒரு விரல் புரட்சி’ என்ற பாடலையே பின்னணி இசையாக்கி பரபரப்பு கூட்டியிருக்கிறார். டாப்பு டக்கர், சிம்டாங்காரன் உள்பட அனைத்து பாடல்களுமே ரசிகர்களை ஈர்க்கிறது. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு காட்சிகளில் வெவ்வேறு டோன்கள். சண்டைக் காட்சிகளில் அவரது கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அரசியல்வாதிகள் பின்னும் சதிவலைகளை விஜய் தகர்ப்பதும், வரலட்சுமியின் வலைக்குள் சிக்கித் தவித்து, கடைசி நிமிடத்தில் அதையும் தாண்டி வெளியில் வருவதுமான ஏ.ஆர்.முருகதாஸின் பரபரப்பான திரைக்கதை, ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும், இந்த பிரச்னையை விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற படபடப்பும் ரசிகர்களை ஆட்கொள்கிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் ஜெயிக்கிறது இந்த சர்கார்.

Share via